/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமாயணம் ஒரு வழிகாட்டி சொற்பொழிவில் விளக்கம்
/
ராமாயணம் ஒரு வழிகாட்டி சொற்பொழிவில் விளக்கம்
ADDED : ஏப் 14, 2025 05:32 AM
அன்னுார்: 'ராமாயணம் ஒரு வழிகாட்டி' என, தொடர் சொற்பொழிவில், மகேஸ்வரி சற்குரு பேசினார்.
அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் 20ம் ஆண்டு ராமநவமி விழா கடந்த 6ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், 10 நாள் தொடர் சொற்பொழிவு தினமும் இரவு 7:00 மணிக்கு நடைபெறுகிறது.
நேற்று முன்தினம் இரவு, 'வித்தகர் அறிகுவார்' என்னும் தலைப்பில், பேச்சாளர் மகேஸ்வரி சற்குரு பேசியதாவது:
ராமாயணம் நமக்கு ஒரு வழிகாட்டி. ராமாயணம் உண்மையான நிகழ்வு என்பதை நிரூபிக்க பல சான்றுகள் உள்ளன. ராமாயணம் ஒரு வாழ்வியல் தத்துவம். யார் ஒருவர் சுக துக்கங்களை சமமாக எண்ணுகிறார்களோ, தைரியம் உடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களே மோட்சத்தை அடையும் வல்லமை படைத்தவர்கள். நாம் பற்றுகின்ற பொருள் நிலையற்றது. நம்மை விட்டுப் போகும்போது துக்கம் ஏற்படும். அதை இயல்பாக கருதுவது தான் பக்குவம். ராமனிடத்தில் அந்தப் பக்குவம் இருந்தது.
இவ்வாறு, அவர் பேசினார். இன்று இரவு 7:00 மணிக்கு, 'முடிந்த பரிசு இதுவோ' என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. நாளை (15-ம் தேதி) காலை 9:00 மணிக்கு அபிஷேக ஆராதனையும், 10:00 மணிக்கு நிறைவு நாள் சொற்பொழிவும் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு மகா தீபாராதனையும், சுவாமி உட்பிரகார உலாவும் நடைபெறுகிறது.

