ADDED : மார் 25, 2026 08:30 PM
அ நிறம் | அளவு
அன்னுார்: அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், 21ம் ஆண்டு ராம நவமி விழாவை முன்னிட்டு ராமாயண தொடர் சொற்பொழிவு இன்று (26ம் தேதி) துவங்குகிறது.
தினமும் இரவு 7:00 மணிக்கு சொற்பொழிவு துவங்கி 8:30க்கு நிறைவுபெறும். இன்று, குழந்தை ராமன் தலைப்பிலும், 27ம் தேதி தசரத ராமன் தலைப்பிலும் சொற்பொழிவு நடக்கிறது.
வரும் 28ம் தேதி காலை திருக்கல்யாண உற்சவம், மதியம் மகா தீபாராதனை, இரவு 7:00 மணிக்கு சீதாராமன் திருக்கல்யாணம் நடக்கிறது. 29, 30, 31, ஏப். 1, 2, 3ம் தேதி இரவு சொற்பொழிவு நடக்கிறது. ஏப். 4ம் தேதி காலை 10:00 மணிக்கு நிறைவு சொற்பொழிவு நடைபெறுகிறது. புலவர் மகேஸ்வரி சத்குரு பேசுகிறார்.
