/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமாயண பாடல்கள் நிகழ்ச்சி:பஞ்சாபி கூட்டமைப்பு ஏற்பாடு
/
ராமாயண பாடல்கள் நிகழ்ச்சி:பஞ்சாபி கூட்டமைப்பு ஏற்பாடு
ராமாயண பாடல்கள் நிகழ்ச்சி:பஞ்சாபி கூட்டமைப்பு ஏற்பாடு
ராமாயண பாடல்கள் நிகழ்ச்சி:பஞ்சாபி கூட்டமைப்பு ஏற்பாடு
ADDED : ஜன 22, 2024 12:24 AM

பெ.நா.பாளையம்:அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று அயோத்தியில் பிரம்மாண்டமாக நடக்கிறது.
இதையொட்டி, 24 மணி நேரம் தொடர்ந்து ராமாயண பாடல்களை பாடி, இசைக்கும் நிகழ்ச்சி பஞ்சாபி கூட்டமைப்பு வளாகத்தில் நேற்று மதியம், 12.00 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி, ராமபிரான், சீதாதேவி மற்றும் லட்சுமணன், ஆஞ்சநேயர் உடன் இருக்கும் உருவப்படம் அலங்காரம் செய்யப்பட்டு, மலர் தூவி வழிபாடுகள் நடத்தப்பட்டன. மேலும், ஆண்கள், பெண்கள் என, நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, துளசிதாசர் அருளிய ராமாயண புத்தகத்தை வைத்து, ராமாயண பாடல்களை பாடி வழிபாடு செய்தனர். மேலும், பெண்கள் ஒன்று கூடி ராமாயண பாடல்களை பாடியும், நடனம் ஆடியும் மகிழ்ந்தனர். நேற்று பகல், 12.00 மணிக்கு தொடங்கிய இந்த ராமாயண பாடல் பாடி, இசைக்கும் நிகழ்ச்சி இன்று பகல், 12.00 மணி வரை தொடர்ந்து, 24 மணி நேரமும் நடக்கிறது. இன்று மதியம், 12.00 மணிக்கு பிறகு ராமாயண பாடல் இசைக்கும் நிகழ்ச்சி நிறைவு பெற்றவுடன், அன்னதானம், சிறப்பு பூஜைகள் நடத்தவும், அயோத்தியில் நடக்கும் கும்பாபிஷேகத்தை பெரிய திரையில் ஒளிபரப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.