/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீதிகளில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தம்
/
வீதிகளில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தம்
ADDED : மே 10, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களது வாகனங்களை, வீதிகளில் தாறுமாறாக நிறுத்திச் செல்கின்றனர்.
பொள்ளாச்சி, மாரியம்மன் கோவிலுக்கு, தினமும் அதிகப்படியான பக்தர்கள் வருகை புரிகின்றனர். குறிப்பாக, விசேஷ நாட்களில், பக்தர்களின் வருகை வழக்கத்துக்கு மாறாக அதிகரிக்கிறது.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், கோவில் ஒட்டிய பகுதிகளில் தாறுமாறாக கார் மற்றும் பைக்குகளை நிறுத்திச்செல்கின்றனர். இதனால், அவ்வழித்தடத்தில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கு, நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

