/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
/
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
ADDED : டிச 26, 2024 11:29 PM
அன்னுார்; கோவை மாவட்டம் அன்னுார் பஸ் ஸ்டாண்டின் தெற்கு பகுதியில் சமீபகாலமாக பஸ் வெளியேவரும் பாதையில் பல பஸ்கள் உள்ளே நுழைகின்றன.
இதனால் ஏற்படும் குழப்பத்தால் பொதுமக்கள் பஸ்களில் ஏறிச் செல்ல குறுக்கே செல்ல வேண்டி உள்ளது. மேலும் அவிநாசியில் இருந்து வருகிற பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாமல் பஸ்கள் வெளியே வரும் இடத்தில் நிறுத்தப்படுகின்றன.
இத்துடன் ஆட்டோக்கள், பஸ் ஸ்டாண்டில் இருந்து மேட்டுப்பாளையம் சாலைக்கு பஸ்கள் திரும்பும் இடத்தில் நிறுத்தப்படுகின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நீண்ட தொலைவிற்கு நிற்கின்றன.
போலீசார் பஸ் ஸ்டாண்ட் முன் நின்று அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் பஸ்கள் எதிர்புறத்தில் நுழைவதை தடுக்க வேண்டும்' என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.