/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளை நினைவூட்டிய ரங்கோலி கோலங்கள்
/
மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளை நினைவூட்டிய ரங்கோலி கோலங்கள்
மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளை நினைவூட்டிய ரங்கோலி கோலங்கள்
மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளை நினைவூட்டிய ரங்கோலி கோலங்கள்
ADDED : ஜன 07, 2025 11:56 PM

கோவை; மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளை நினைவூட்டும், வண்ணக் கோலங்களை வரைந்து, அசத்தினர் தினமலர் வாசகியர்.
கோவையில் தினமலர் மற்றும் தி சென்னை சில்க்ஸ் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை சார்பில், 'மார்கழி விழாக்கோலம்' கோலப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அபார்ட்மென்ட்களில் வசிக்கும் நம் வாசகியர், போட்டியில் பங்கேற்று புள்ளிக்கோலம், பூக்கோலம், ரங்கோலி என, விதவிதமான வண்ணக் கோலங்கள் போட்டு, பரிசுகளை வென்று வருகின்றனர்.
கோவை உக்கடம் பைபாஸ் ரோடு, எஸ்.எம்.எஸ். லேக்வியூ அபார்ட்மென்டில் நடந்த கோலப்போட்டியில், 33 வாசகியர் பங்கேற்றனர்.
ரங்கோலி 28 பேரும், புள்ளிக் கோலம் நான்கு பேரும், ஒருவர் பூக்கோலமும் போட்டு இருந்தனர். மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளை நினைவூட்டும் வகையில், ஆண்டாள் சிறுமியாக இருக்கும் தோற்றத்தை, ரங்கோலியில் அழகாக வரைந்து, வாசகி ஆர்த்தி அசத்தி இருந்தார்.
வாசகி விஜயலட்சுமி, குழல் ஊதும் கண்ணனின் தோளில் சாய்ந்தபடி, குழலிசையை ரசிக்கும் ராதையை, ரங்கோலியில் அற்புதமாக தீட்டி இருந்தார்.
உலகில் மூன்றடி மண் கேட்ட, வாமன அவதாரத்தை குறியீடாக பயன்படுத்தி, வாசகி பிரீத்தி அழகான ரங்கோலி வரைந்து இருந்தார்.
வாசகி சங்கீதா, வெண்ணெய் தயாரிக்கும் கோபியரையும், வாசகி காயத்ரி, சிவனும் பார்வதியும் ஊஞ்சலாடும் காட்சியையும் வரைந்து, அசத்தி இருந்தனர்.
வாசகி வித்யாஸ்ரீ ரங்கோலியில் வரைந்து இருந்த ஐஸ் கிரீம் கோனில் அமர்ந்து இருக்கும் வண்ணத்துப்பூச்சி அனைவரையும் கவர்ந்தது.
வாசகி ஆதிலட்சுமி போட்டிருந்த மாக்கோலமும், பிரேமலதா வித்யா இணைந்து போட்டிருந்த பூக்கோலமும் வேறு ரகம்.
இந்த மார்கழி விழாக்கோல போட்டிகளை, எல்ஜி அல்ட்ரா மேடு பெர்பெக்ட்லி மற்றும் ஸ்ரீபேபி பிராப்பர்ட்டிஸ் நிறுவனத்தினர் இணைந்து வழங்கினர்.