/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலியல் பலாத்கார வழக்கு; இன்ஜினியருக்கு 10 ஆண்டு சிறை
/
பாலியல் பலாத்கார வழக்கு; இன்ஜினியருக்கு 10 ஆண்டு சிறை
பாலியல் பலாத்கார வழக்கு; இன்ஜினியருக்கு 10 ஆண்டு சிறை
பாலியல் பலாத்கார வழக்கு; இன்ஜினியருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : செப் 26, 2024 11:49 PM
கோவை : இளம்பெண் பலாத்கார வழக்கில், சாப்ட்வேர் இன்ஜினியருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை, துடியலுார் அருகேயுள்ள தொப்பம்பட்டி பிரிவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சிபிராஜ்,38, ஐ.டி., கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
ஈரோட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், சிபிராஜிக்கும் திருமணம் பேசி, இரு வீட்டாரும் முடிவு செய்தனர். ஆனால், திடீரென சிபிராஜ் பெற்றோருக்கு பெண்ணை பிடிக்கவிலை என்று கூறி திருமணத்தை நிறுத்தி விட்டனர்.
இதற்கிடையில், திருமணம் சம்பந்தமாக பேசலாம் என்று கூறி, அந்த பெண்ணை கோவைக்கு அழைத்தார். அந்த பெண்ணும் சிபிராஜை சந்திக்க சென்றார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். பல மாதங்களாகியும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றினார்.
புகாரின் பேரில், கடந்த 2020, டிச., 30ல், துடியலுார் போலீசார் வழக்கு பதிந்து சிபிராஜை கைது செய்தனர். அவர் மீது கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி நந்தினிதேவி, குற்றம் சாட்டப்பட்ட சிபிராஜிக்கு, 10 ஆண்டுசிறை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஜிஷா ஆஜரானார்.

