ADDED : ஜன 23, 2026 05:03 AM
அ நிறம் | அளவு
கோவை, குடும்ப அட்டைதாரர்களுக்கான ஜனவரி மாத சிறப்பு குறைதீர் முகாம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது.
மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறவுள்ள இந்த முகாமில், பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், பிழைத் திருத்தம், மொபைல் எண் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
