/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கார்டுதாரர்கள் குறை தீர்ப்பு முகாம்
/
ரேஷன் கார்டுதாரர்கள் குறை தீர்ப்பு முகாம்
ADDED : ஜன 20, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:கோவையில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில், ரேஷன் கார்டுகள் சம்பந்தமான சிறப்பு குறை தீர்ப்பு முகாம், இன்று நடக்கிறது.
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் குறைதீர்ப்பு சிறப்பு முகாமில், ரேஷன் கார்டுதாரர்கள், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தல், மொபைல் எண் மாற்றம் தொடர்பான குறைகளை மனுக்களாக கொடுத்து பொதுமக்கள் பயன் பெறலாம் என அழைப்பு விடப்பட்டுள்ளது.