/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
85 ஆயிரம் பயனாளிகளின் வீடு தேடி வருகிறது ரேஷன்
/
85 ஆயிரம் பயனாளிகளின் வீடு தேடி வருகிறது ரேஷன்
ADDED : ஆக 02, 2025 11:43 PM
கோவை: கோவை மாவட்டத்தில், 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம், 15ல் துவக்கப்படுகிறது.
நகர்ப்பகுதியில் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு, 70 கார்டுதாரர்களுக்கும், புறநகர் பகுதியில், 60 கார்டு தாரர்களுக்கும் பொருட்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், 85 ஆயிரத்து, 622 கார்டு தாரர்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 1,490 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒரு மாதத்தில் மூன்று நாட்கள், இத்திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்கப்படும்.
மழையில் பொருட்கள் நனையாமல் இருக்க, மூடிய வாகனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும், தேவையான அத்தியாவசிய பொருட்களை நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணியில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், இத்திட்ட செயல்பாட்டை மாதந்தோறும் கலெக்டர் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.