ADDED : பிப் 02, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம், இன்றும் (2ம் தேதி) மற்றும் நாளையும் (3ம் தேதி) மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும், வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் கடை ஊழியர்களால் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ், இன்று (2ம் தேதி) மற்றும் நாளை (3ம் தேதி) வழங்கப்படுகிறது. எனவே, உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் இத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் பயன்படுத்திக்கொள்ளுமாறு, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
