ADDED : பிப் 08, 2026 05:04 AM
அ நிறம் | அளவு
கோவை: தமிழகத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி ரேஷன் கார்டுதாரர்களின் நலன் கருதி, அவர்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் 'தாயுமானவர் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதன் கூறுகையில், ''இந்த மாதம், திட்டத்தின் பயனாளர்கள், 59 ஆயிரத்து 708 கார்டுதாரர்களுக்கு, அறிவிக்கப்பட்ட தேதியில், ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. பயனாளர்களிடம் இருந்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை,'' என்றார்.
