/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தலுக்கு முன் தேவை சம்பள உயர்வு கேட்கிறார்கள் ரேஷன் பணியாளர்கள்
/
தேர்தலுக்கு முன் தேவை சம்பள உயர்வு கேட்கிறார்கள் ரேஷன் பணியாளர்கள்
தேர்தலுக்கு முன் தேவை சம்பள உயர்வு கேட்கிறார்கள் ரேஷன் பணியாளர்கள்
தேர்தலுக்கு முன் தேவை சம்பள உயர்வு கேட்கிறார்கள் ரேஷன் பணியாளர்கள்
ADDED : ஆக 01, 2025 09:33 PM
கோவை; தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின், மாவட்ட செயற்குழு கூட்டம் தாமஸ் கிளப் அரங்கில் நடந்தது. மாவட்ட தலைவர் காளியப்பன் தலைமை வகித்தார்.
இதில் தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ராஜேந்திரன் பேசியதாவது:
ரேஷன்கடை பணியாளர்கள் வைக்கும் கோரிக்கைகளை, தமிழக அரசு பரிசீலனை செய்வதில் மெத்தனமாக இருந்து வருகிறது. ஊதிய உயர்வு குறித்து, அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து சட்டசபை தேர்தலுக்கு முன் அறிவிக்க வேண்டும்.
இப்போது வீடு, வீடாக பொருட்கள் வினியோகம் செய்யும் திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்தும், வண்டி வாடகை, ஏற்று, இறக்க கூலி குறித்தும் அரசு விளக்க வேண்டும்.
கட்டாயம், 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள அனைத்து கடைகளுக்கும், ஒரு உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும். குடோனிலிருந்து சரியான எடையில், பொருட்கள் சப்ளை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
70 வயது கடந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு, அவர்களுடைய ஒப்புதல் பெற்ற பிரதிநிதிகளுக்கு பொருட்கள் வழங்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.