sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காத்திருப்பு போராட்டம்; ரேஷன் ஊழியர்கள் முடிவு

காத்திருப்பு போராட்டம்; ரேஷன் ஊழியர்கள் முடிவு

காத்திருப்பு போராட்டம்; ரேஷன் ஊழியர்கள் முடிவு


ADDED : ஆக 11, 2025 08:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2025 08:43 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

- - நமது நிருபர் -

கோரிக்கைகள் குறித்து வரும் 24ம் தேதிக்குள் சங்கத்தை அழைத்துப் பேசி அறிவிக்க வேண்டும். இல்லையெனில் செப்., 12ம் தேதி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என, தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறினர்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய நிர்ணயக்குழு அமைக்க வேண்டும்; அதில் கடை ஊழியர் உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும்.

கடைகளில் கார்டுகளுக்கு துல்லிய எடையில் பொருள் வழங்குவது போல், கடைகளுக்கும் சரியான எடையில் பொருள் வழங்க வேண்டும்.

வீடு தேடி ரேஷன் பொருட்களை கொண்டு செல்வதற்குப் பதிலாக, இயலாத கார்டுதாரருக்கு 'நாமினி' நியமித்து அவரது ஆதாரை பதிவு செய்து, பொருட்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவற்றை கோரிக்கை மனுவாக முதல்வர், துறை அமைச்சர், ெசயலர், பதிவாளர் உள்ளிட்டோருக்கு அளித்துள்ளோம்.

கோரிக்கைகள் குறித்து வரும் 24ம் தேதிக்குள் சங்கத்தை அழைத்துப் பேசி அறிவிக்க வேண்டும். இல்லையெனில் செப்., 12ம் தேதி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு, தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us