/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
8வது ஊதியக் குழுவில் சேர்க்க ரேஷன் ஊழியர்கள் வேண்டுகோள்
/
8வது ஊதியக் குழுவில் சேர்க்க ரேஷன் ஊழியர்கள் வேண்டுகோள்
8வது ஊதியக் குழுவில் சேர்க்க ரேஷன் ஊழியர்கள் வேண்டுகோள்
8வது ஊதியக் குழுவில் சேர்க்க ரேஷன் ஊழியர்கள் வேண்டுகோள்
ADDED : ஜன 20, 2025 06:57 AM
கோவை, : தமிழக அரசு ரேஷன்கடை பணியாளர் சங்கத்தின், மண்டல அளவிலான நிர்வாகிகள் கூட்டம், கோவை சிவானந்தா காலனியில் நடந்தது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ரேஷன் கடை பணியாளர்களுக்கு, தனித்துறை அறிவிக்க வேண்டும். பணியாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு தொகையை, பி.எப்., அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
ரேஷன் கடை பணியாளர்களுக்கும், பொதுநிலை திறன் அடிப்படையில், பணி மாறுதல் வழங்க வேண்டும். ஒரே நாடு; ஒரே ரேஷன் திட்டத்தில், வெளி மாவட்ட குடும்ப அட்டைகள் மற்றும் வெளி மாநில குடும்ப அட்டைகளுக்கு, பொருட்கள் வழங்கும் போது, ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
தமிழக அரசு, ரேஷன் கடை பணியாளர்களுக்கு புதிய ஊதியம் வழங்கிட, தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். ரேஷன் பணியாளர்களையும் எட்டாவது ஊதிய குழுவில் சேர்த்து, ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் முருகேசன், மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாநில இணைச் செயலாளர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.