/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் பணியாளர்களுக்கு பி.எப்., பிடிக்க வேண்டுகோள்
/
ரேஷன் பணியாளர்களுக்கு பி.எப்., பிடிக்க வேண்டுகோள்
ADDED : ஆக 10, 2025 10:57 PM
கோவை, ; ரேஷன் கடை பணியாளர்களுக்கு, பி.எப்., பணம் பிடித்தம் செய்து, அந்த தொகையை பணியாளரின் வருங்கால வைப்புநிதி கணக்கில் செலுத்தி, ஆண்டுக்கு ஒருமுறை அதன் இருப்பு விபரங்கள் தெரிவிக்க வேண்டும், என தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
சங்கத்தின் மாநிலத்தலைவர் ராஜேந்திரன் கூறியிருப்பதாவது:
ரேஷன்கடை பணியாளர்களுக்கு புதிய ஊதியக்குழு கமிட்டி அமைத்து, அந்த கமிட்டியில் ரேஷன்கடை பணியாளர் ஒருவரை, குழு உறுப்பினராக சேர்க்க வேண்டும்.
70 வயதிற்கு மேல் உள்ள, அட்டைதாரர்களின் வீடுகளுக்கு பொருள்கள் வழங்குவதை தவிர்த்து, அந்த அட்டைதாரரின் விருப்பத்திற்கு ஏற்ப, அவரது நாமினியாக ஒருவரை நியமித்து, அவரது ஆதார் இணைக்கப்பட்டு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும். நீண்ட தொலைவு சென்று பணிபுரிந்து வருகிற பணியாளர்கள், அருகில் உள்ள இடங்களில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.
தமிழக அரசு புதிய சுகாதார காப்பீடு திட்டத்தை, ரேஷன் கடை பணியாளர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அனைத்து ரேஷன்கடை பணியாளர்களுக்கும் சங்கத்தின் லாப, நஷ்டம் பார்க்காமல் ஒரே மாதிரியான போனஸ் வழங்க, அரசு முன்வர வேண்டும். ரேஷன் கடை பணியாளர்கள், பி.எப்., பிடித்தம் செய்து அந்த தொகையை, பணியாளரின் வருங்கால வைப்புநிதி கணக்கில் செலுத்தி, ஆண்டுக்கு ஒருமுறை அதன் இருப்பு விபரங்களை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.