தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா


ADDED : ஜன 22, 2024 12:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2024 12:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போத்தனூர்;சுந்தராபுரம் அடுத்து சிட்கோ மேம்பாலம் அருகேயுள்ள ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியின், 20 வது பட்டமளிப்பு விழா ரத்தினம் கல்வி குழும தலைவர் மதன் செந்தில். தலைமையில் நடந்தது. மத்திய அமைச்சர் முரளிதரன் பேசுகையில், சர்வதேச தரத்தில், மாணவர்களுக்கு மொழித்திறன் அவசியமாகிறது.

நாட்டின் தகவல் தொடர்பு சார்ந்தவைகள் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் உள்ளது. இளைஞர்கள் தொழில் துவங்க அதிகளவு வாய்ப்புகள் உள்ளன. நாட்டின் வரலாறு, கலாசாரம் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரியம் சிறந்தவையாக காணப்படுகிறது என்றார்.

தொடர்ந்து, 750 மாணவர்களுக்கு பட்ட சான்றிதழை வழங்கினார். முன்னதாக கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். ரத்தினம் கல்வி குழும இயக்குனர் ஷீமா, செயலாளர் மாணிக்கம், துணை தலைவர் நாகராஜ், துணை முதல்வர் சுரேஷ், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தினகரன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us