/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்தினம் கல்லுாரி புதிய வளாகம் கோவில்பாளையத்தில் திறப்பு
/
ரத்தினம் கல்லுாரி புதிய வளாகம் கோவில்பாளையத்தில் திறப்பு
ரத்தினம் கல்லுாரி புதிய வளாகம் கோவில்பாளையத்தில் திறப்பு
ரத்தினம் கல்லுாரி புதிய வளாகம் கோவில்பாளையத்தில் திறப்பு
ADDED : மார் 15, 2024 12:20 AM

கோவை;ரத்தினம் கல்விக் குழுமங்களின் மற்றொரு அங்கமாக 'டிப்ஸ் குளோபல்' என்ற புதிய வளாகம் கோவில்பாளையத்தில் திறக்கப்பட்டது.
நேற்று நடந்த இதன் திறப்பு விழாவில், ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன் செந்தில் தலைமை தாங்கினார். ரத்தினம் கல்விக் குழுமங்களின் இயக்குனர் சீமா, செயலாளர் மாணிக்கம், துணைத் தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திரைப்பட நடிகர் ஆரி அர்ஜுனன் மற்றும் தொழிலதிபர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
ரத்தினம் கல்வி குழும தலைவர் பேசுகையில், ''இந்த கல்வி வளாகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கட்டடவியல் கல்லுாரி மற்றும் மேலாண்மைக் கல்லுாரி ஆகியவை ஒரே இடத்தில் அமைத்திருப்பதன் மூலம் மாணவர்களின் சிந்திக்கும் திறனும், பல பிரச்னைகளுக்கு பல்வேறு கோணங்களில் தீர்வு காணும் திறனும் மேம்படும்,'' என்றார்.