/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்தினம் தொழில்நுட்ப கல்லுாரி பட்டமளிப்பு விழா
/
ரத்தினம் தொழில்நுட்ப கல்லுாரி பட்டமளிப்பு விழா
ADDED : பிப் 04, 2024 12:04 AM
போத்தனூர்:சுந்தராபுரம் அடுத்து ரயில்வே மேம்பாலம் அருகேயுள்ள ரத்தினம் தொழில்நுட்ப கல்லூரி பட்டமளிப்பு விழா, ரத்தினம் கல்வி குழும தலைவர் மதன் செந்தில் தலைமையில் நடந்தது.
குவரா நிறுவன தேசிய வர்த்தக தலைவர் நிதின் பாட்டில் பேசுகையில், இளமைக்காலத்தை வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள் இன்றி வாழ்வை நல்முறைப்படுத்த முடியாது. அவர்களை என்றும் மதிக்க வேண்டும், என்றார்.
பாலோ ஆல்டோ நிறுவன தேசிய தலைவர் ரேஷ்மி பேசுகையில், கடின உழைப்பு இருந்தால் மட்டுமே, சவால்களை எதிர்கொள்ள முடியும். தொடர்ந்து பயில வேண்டும். நாம் கற்றதை பிறருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும், என்றார்.
தொடர்ந்து, 125 பேருக்கு பட்ட சான்றிதழை இருவரும் வழங்கினர். முன்னதாக, கல்லூரி முதல்வர் நாகராஜ் வரவேற்றார். துணை முதல்வர் கீதா, நிர்வாக அலுவலர் சிவசுப்ரமணியன், ரத்தினம் கல்வி குழுமத்தை சேர்ந்த முதல்வர்கள், பேராசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.