/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டெக்ஸ்ப்ரோசில் துணைத்தலைவராக ரவிசாம் தேர்வு
/
டெக்ஸ்ப்ரோசில் துணைத்தலைவராக ரவிசாம் தேர்வு
ADDED : ஆக 16, 2025 09:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; டெக்ஸ்ப்ரோசில் ( பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்) துணைத்தலைவராக ரவிசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெக்ஸ்ப்ரோசில் என்பது, நம் நாட்டிலுள்ள ஒரு தன்னாட்சி பெற்ற லாப நோக்கமற்ற அமைப்பு. இது பருத்தி ஜவுளித்துறையின் ஏற்றுமதியை மேம்படுத்த,1954-ம் ஆண்டு துவங்கப்பட்டது. நாடு முழுக்க 2,000 த்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
இதன் துணைத்தலைவராக கோவையை சேர்ந்த, தொழிலதிபர் ரவிசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கோவையிலுள்ள தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.