/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆட்டோ பயணத்தில் புத்தகம் வாசிக்கலாம்!
/
ஆட்டோ பயணத்தில் புத்தகம் வாசிக்கலாம்!
ADDED : ஜன 25, 2024 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : மக்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தினை அதிகரிக்கும் வகையில், 'ஆட்டோவில் நூலகம்' என்ற திட்டம், ஏற்கனவே கோவை மாநகர போலீசார், கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக்கல்லூரி சார்பில் செயல்படுத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, மேலும் பல ஆட்டோக்களில், நூலகம் ஏற்படுத்தும் விழா, கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பங்கேற்றார். விழாவில், 500க்கு மேற்பட்ட ஆட்டோக்களுக்கு, புத்தகங்கள் மற்றும் பெட்டிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், கல்லூரி துணைத்தலைவர் இந்து முருகேசன், முதன்மை செயல் அலுவலர் மோகன்தாஸ் காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.