/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புத்தகம் படித்தால் வாழ்வில் உயரலாம்: தமிழ்ச்சங்க விழாவில் பேச்சு
/
புத்தகம் படித்தால் வாழ்வில் உயரலாம்: தமிழ்ச்சங்க விழாவில் பேச்சு
புத்தகம் படித்தால் வாழ்வில் உயரலாம்: தமிழ்ச்சங்க விழாவில் பேச்சு
புத்தகம் படித்தால் வாழ்வில் உயரலாம்: தமிழ்ச்சங்க விழாவில் பேச்சு
ADDED : பிப் 12, 2025 11:22 PM

கோவில்பாளையம்; 'வாழ்வில் வளர, அற நூல்களைப் படிக்க வேண்டும்' என, தமிழ்ச்சங்க விழாவில், தமிழ் சங்கத் தலைவர் பேசினார்.
கோவில்பாளையம்,விவேகானந்தா மேலாண் மை கல்லூரியில், கவையன்புத்தூர் தமிழ் சங்க விழா நடந்தது. உதவி பேராசிரியர் கணேசன் வரவேற்றார்.
தமிழ்நாடு தமிழ் சங்க தலைவர் தங்கவேல் பேசுகையில், அன்பும், பண்புமே ஒரு மனிதனை உயர்ந்த மனிதனாக வாழ வைக்கிறது.
மென்மேலும் வாழ்வில் வளர, நூல்களை படிக்க வேண்டும். புத்தகம் படிப்போம். புத்தியை செதுக்குவோம், என்றார்.
கவிஞர் வெற்றிவேலன் எழுதிய, 'தவத்திரு குன்றக்குடிகளார்' என்ற நூலை, டாக்டர் முத்துசாமி வெளியிட, புலவர் ராமலிங்கம், தலைமையாசிரியர் ஜெகநாதன், ஆசிரியர் குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
புலவர் ராமலிங்கம், 'தெரிதலும் தேர்வு செயலும்' என்கிற தலைப்பில் பேசினார். டாக்டர் முத்துச்சாமி, பேராசிரியர் வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் விஜயகுமார் தலைமையில் நாயன்மார்கள் குறித்த கவியரங்கம் நடந்தது.
நிகழ்ச்சியில் சான்றோர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.