/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எதிர்காலத்திற்கு தயார்; புதிய முயற்சி அறிமுகம்!
/
எதிர்காலத்திற்கு தயார்; புதிய முயற்சி அறிமுகம்!
ADDED : செப் 27, 2025 01:07 AM
ப ள்ளி கல்வித்துறை 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு எதிர்காலத்திற்கு தயார் (Future Ready) என்ற புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மாணவர்களுக்கு மாதந்தோறும் கடந்த ஆண்டில் படித்த பாடப் பொருளில் இருந்து ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொது அறிவு ஆகிய பாடங்களில் உயர் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் வினாக்கள் வடிவமைக்கப்படும். இந்த பணியை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மேற்கொள்ளும். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் மாணவர்களுக்கு அந்த வினாக்கள் கொண்டு மதிப்பீடு தேர்வு நடத்தப்படும்.
எதிர்காலத்தில் மாணவர்கள், போட்டித்தேர்வுகள், திறனறிவு தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பிற்கான திறன் தேர்வுகள் ஆகியவற்றை தயக்கமின்றி எதிர்கொள்ளும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்படுகிறது. படித்ததை மாணவர்கள் நினைவுகூரும் விதமாகவும், அது அவர்களின் எதிர்காலத்திற்கு உதவிடும் வகையிலும், சிந்தனை ஆற்றலையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தேர்வுகளை எதிர்கொள்ளும் பயத்தையும் மாணவர்களிடம் குறைக்க வழிவகுக்கும்.
ஆங்கிலப் பாடத்தில் வாசித்தல், இலக்கணம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் சிந்தித்து பதிலளிக்கும் வகையிலான கேள்விகள் மற்றும் பொது அறிவிற்கு தனியாக கேள்விகள் வடிவமைக்கப்படும். இவை ஒவ்-வொரு மாதமும் கவுன்சில் மூலம் தயாரிக்கப்பட்டு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பள்ளிக-ளுக்கு அனுப்பப்படும். பள்ளியின் தலைமை ஆசிரியர் அதனை பதிவிறக்கம் செய்து ஆசிரியர்கள் மூலம் மதிப்-பீடு தேர்வை நடத்த வேண்டும்.
கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு அந்தந்த பாட ஆசிரியர்கள் மூலமும், பொது அறிவு கேள்விகள் வகுப்பு ஆசிரியர் மூலமும் நடத்தப்படும். இந்த நடைமுறை ஒவ்வொரு மாதமும் நடைபெறுவதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியில் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்கள், வட்டார, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளி ஆய்வின்போது கலந்துரையாட வேண்டும் எனவும், கலந்தாய்வு கூட்டங்களில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி மாணவர்களுக்கு உயர்கல்வியில் மட்டுமின்றி, எதிர்கா-லத்திற்கு மிக உதவியாக இருக்கும் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
புத்தக அறிவுக்கு அப்பால்...! பாடப்புத்தக அறிவுக்கு அப்பாற்பட்ட திறன்கள், அனுபவங்கள் மற்றும் முழுமையான வளர்ச்சியை களப்பய-ணங்கள், கலாசார செயல்பாடுகள், கலைகள், விளையாட்டுகள் மற்றும் மென்மையான திறன்களின் வளர்ச்சி-யைக்கொண்டு பெற முடியும்.
வகுப்பறை சூழலுக்கு வெளியே கல்வி அனுபவங்களைப் பெறுதல்; கதை சொல்லுதல், நாடகம், இசை, கலை மற்றும் கைவினை போன்ற செயல்பாடுகள் மூலம் மாணவர்களின் திறன்களை மேம்படுத்துதல்; உடல்ந-லத்தை மேம்படுத்தவும், குழுப்பணி மற்றும் தலைமைப் பண்புகளை வளர்க்கவும் விளையாட்டுக்களில் ஈடுபடுத்-துதல்; தலைமைத்துவம், தொடர்பு, மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன் போன்ற திறன்களைப் பெறுதல்; ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து கல்வி முறையை உருவாக்குதல் போன்றவை மாணவர்களுக்கு அவசியமானது.