/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெடுஞ்சாலைத்துறை இடத்தில் புதைத்த உடல் மறு அடக்கம்
/
நெடுஞ்சாலைத்துறை இடத்தில் புதைத்த உடல் மறு அடக்கம்
நெடுஞ்சாலைத்துறை இடத்தில் புதைத்த உடல் மறு அடக்கம்
நெடுஞ்சாலைத்துறை இடத்தில் புதைத்த உடல் மறு அடக்கம்
ADDED : மே 15, 2025 11:59 PM
பொள்ளாச்சி,; பொள்ளாச்சி அருகே, நெடுஞ்சாலைத்துறை இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு, மயானத்தில் மறு அடக்கம் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி அருகே, சந்தேகவுண்டன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நஞ்சேகவுண்டன்புதுாரில் கடந்த ஜன., மாதம் இறந்த மரகதம் என்பவரின் உடல், நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக, வரப்பெற்ற புகார் மனு மீது பொள்ளாச்சி வருவாய்துறை அதிகாரிகள், இறந்தவரின் குடும்பத்துடன் பேச்சு நடத்தினர். இதையடுத்து, சுமுக முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று தாசில்தார் வாசுதேவன் தலைமையில், மருத்துவத்துறையினர், ஊராட்சி நிர்வாகம், போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் உதவியுடன், நெடுஞ்சாலைத்துறை இடத்தில் புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்தும் மயானத்தில் மறு அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.