/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லஞ்சம் கேட்டு மிரட்டிய எப்.எஸ்.ஓ.,மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை
/
லஞ்சம் கேட்டு மிரட்டிய எப்.எஸ்.ஓ.,மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை
லஞ்சம் கேட்டு மிரட்டிய எப்.எஸ்.ஓ.,மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை
லஞ்சம் கேட்டு மிரட்டிய எப்.எஸ்.ஓ.,மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை
ADDED : ஜூலை 16, 2025 10:48 PM
கோவை; கோவை சரவணம்பட்டி பகுதியில், மளிகைக்கடை ஒன்றில் லஞ்சம் கேட்டு மிரட்டிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மீது, துறைரீதியான நடவடிக்கை எடுக்க, மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.
கடந்த மாதம், சரவணம்பட்டி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சக்திவேல், அப்பகுதி சில்லரை வணிகர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளார். லஞ்சம் கொடுத்தால், குறிப்பிட்ட காலத்திற்கு ஆய்வு மேற்கொள்ளப்படாது என தெரிவித்துள்ளார்.
லஞ்சம் கொடுக்க வணிகர் மறுத்ததால், ஆய்வு மேற்கொண்டு, 2,000 ரூபாய் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. உணவு பாதுகாப்பு அலுவலர் விதிமுறைகளை மீறி, தனக்கு சுயமாக ஓர் உதவியாளரை வைத்துக்கொண்டு, அவர் வாயிலாக லஞ்சம் கேட்டதும், அபராதம் எவ்வித கையெழுத்தும் இன்றி உதவியாளர் வாயிலாக, கடைக்காரருக்கு நோட்டீஸ் வழங்கியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த புகாரை தொடர்ந்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவுகள் மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதாவிடம் கேட்டபோது, '' புகார் உறுதி செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அறிவுறுத்தலின் படி, துறை ரீதியான நடவடிக்கைக்கு மாநில உணவு பாதுகாப்புத்துறை கமிஷனருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

