/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ் பாடவேளை நேரத்தை குறைக்க பரிந்துரை; துறை பிரதிநிதிகளுக்கு கடும் எதிர்ப்பு
/
தமிழ் பாடவேளை நேரத்தை குறைக்க பரிந்துரை; துறை பிரதிநிதிகளுக்கு கடும் எதிர்ப்பு
தமிழ் பாடவேளை நேரத்தை குறைக்க பரிந்துரை; துறை பிரதிநிதிகளுக்கு கடும் எதிர்ப்பு
தமிழ் பாடவேளை நேரத்தை குறைக்க பரிந்துரை; துறை பிரதிநிதிகளுக்கு கடும் எதிர்ப்பு
ADDED : ஜூலை 10, 2025 08:53 PM
கோவை; தமிழ் பாடவேளையை நான்கு மணி நேரமாக குறைக்க பரிந்துரைத்த துறை பிரதிநிதிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலையில், 2022 - 23ம் கல்வியாண்டில் பி.காம்., பி.பி.ஏ., பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய படிப்புகளுக்கு தமிழ் பாடவேளை, 4 மணி நேரமாக குறைக்கப்பட்டது. பிற பாடங்களுக்கு, 6 மணி நேரமாக பாடவேளை ஒதுக்கப்பட்டது.
ஒரே பாடத்திட்டத்தைநடத்தி முடிக்க, துறைகளுக்கு வெவ்வேறு பாடவேளை நேரம் ஒதுக்கப்பட்டது.இந்நிலையில், அனைத்து துறைகளுக்கும் தமிழ் பாடவேளை, 4 மணி நேரமாக குறைக்கப்பட்டு இருப்பதாக தமிழ் ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பல்கலை நிர்வாகம் இதை சரிசெய்யும் விதமாக பல்கலையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து கல்லுாரிகளும் தமிழ்மொழி பாடத்துக்கு ஆறு மணி நேர பாடவேளை என்பதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பல்கலையில், பாடத்திட்ட நிலைக்குழுக் கூட்டம் நடந்தது. பாடத்திட்டக்குழுக்கள் இறுதி செய்த தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சில துறைகள் மட்டும் அரசின் கொள்கைகள்,பல்கலையின் விதிகளுக்கு முரணாக, தமிழ் பாடவேளை நேரத்தை நான்கு மணி நேரமாக குறைக்க பரிந்துரையை வழங்கியிருந்தனர். இதற்கு தமிழ் பாடத்திட்டக்குழுவின் சார்பாகக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் அத்துறையினர் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தொடர்ந்து பிடிவாதம் பிடித்தனர். இதனால், அத்துறையினருக்கு மட்டும் பாடத்திட்டத் தீர்மானங்கள் திருத்தப்படாமல் நிலைக்குழுக் கூட்டம் முடித்து வைக்கப்பட்டது.
பல்கலை பேராசிரியர் ஒருவர் கூறுகையில்,'கடந்த 2021 ல் இளநிலை, முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தமிழ் பாடம் கட்டாயம் படிக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பாரதியார் பல்கலை அதை 2023 - 24 ம் ஆண்டு அமல்படுத்தியது. இருப்பினும் இது தொடர் பிரச்னையாக இருந்து வருகிறது.
தமிழகத்தின் வேறு எந்த பல்கலையிலும் தமிழ் பாடவேளை குறைக்கப்படவில்லை. அப்படியிருக்கையில் குறிப்பிட்ட துறையினர் தமிழ் பாடவேளையை குறைக்க பரிந்துரைப்பது எந்த விதத்தில் சரி எனத் தெரியவில்லை. தமிழக அரசின் கொள்கைக்கு எதிராக செயல்படுவதற்கு பல்கலை நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.

