/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோழிக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி செலுத்த பரிந்துரை
/
கோழிக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி செலுத்த பரிந்துரை
கோழிக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி செலுத்த பரிந்துரை
கோழிக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி செலுத்த பரிந்துரை
ADDED : ஏப் 14, 2025 05:56 AM
பொள்ளாச்சி : கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் வராமல் தவிர்க்க, தடுப்பூசி போடும்படி, வேளாண் கால நிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது.
மையத்தின் இயக்குநர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தூறல் அல்லது லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது. வெப்ப நிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம். குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியசாக இருக்கும். பெரும்பாலும் தென்மேற்கு திசையில் இருந்து காற்றுவீசும்.
வறண்ட வானிலை மற்றும் வேகமான காற்று காரணமாக, மண் ஈரத்தைப் பொறுத்து நீர்ப்பாசனம் செய்யவும். தயார் செய்த நிலத்தில் மரவள்ளி நடவு செய்யலாம். 5 மாத வயதுடைய வாழைகளுக்கு போதிய முட்டுக் கொடுத்தால், காற்றின் வேகத்துக்கு சாயாமல் பாதுகாக்கலாம்.
கால்நடைகளுக்கு வெப்ப அயற்சியைத் தவிர்க்க அடிக்கடி சுத்தமான குடிநீர் வழங்கவும். கோழிகளில் வெள்ளைக் கழிச்சல் நோய் வராமல் இருக்க,அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

