/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பிட்டிங்' கொடுத்த சரக்கு ஆட்டோ மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
/
'பிட்டிங்' கொடுத்த சரக்கு ஆட்டோ மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
'பிட்டிங்' கொடுத்த சரக்கு ஆட்டோ மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
'பிட்டிங்' கொடுத்த சரக்கு ஆட்டோ மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
ADDED : ஜூலை 02, 2025 09:40 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், 'பிட்டிங்' கொடுத்த சரக்கு ஆட்டோவை மீட்டு, உரியவரிடம் மேற்கு போலீசார் ஒப்படைத்தனர்.
பொள்ளாச்சி அருகே, நல்லுாரை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது சரக்கு ஆட்டோவை, நண்பரிடம், 'பிட்டிங்'ஆக கொடுத்தார்.அவர், மற்றொரு நண்பரிடம் கொடுக்க, இது இருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மாறிச் சென்றது.
சரக்கு ஆட்டோவை, நண்பரிடம் கேட்ட போது அவர் சாக்கு போக்கு சொல்லி வந்ததால் சந்தேகமடைந்த முருகானந்தம், மேற்கு போலீசாரிடம் சம்பவம் குறித்து புகார் தெரிவித்தார்.
இது குறித்து, ஏ.எஸ்.பி., சிருஷ்டி சிங் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் மீனாப்பிரியா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வாகனத்தின் பதிவெண் கொண்டு, எங்கேயாவது போக்குவரத்து விதிமுறை மீறல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என சோதனையிட்டனர்.அதில், மதுரையில், 'ஓவர்லோடு' வழக்குப்பதிவு செய்துள்ளது தெரியவந்தது.
மதுரை போலீஸ் எஸ்.ஐ.,யிடம் விசாரித்த போது, அந்த சரக்கு ஆட்டோ டிரைவரின் மொபைல்போன் உள்ளிட்ட விபரங்கள் கிடைத்தது. அதன்பின், பெரியகுளம் தென்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் ஆட்டோ இருப்பது தெரிந்தது.
தேனி பகுதிக்கு வேறு வழக்கு விசாரணைக்காக சென்ற பொள்ளாச்சி போலீசாரிடம், இச்சம்பவம் குறித்து தெரிவித்தனர். அவர்கள், ஆட்டோவை மீட்டு, பொள்ளாச்சிக்கு கொண்டு வந்து, உரியவரிடம் ஒப்படைத்தனர்.சரக்கு ஆட்டோவை பெற்றவர், போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.