/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சட்ட தன்னார்வ தொண்டர் பணிக்கு ஆட்கள் நியமனம்
/
சட்ட தன்னார்வ தொண்டர் பணிக்கு ஆட்கள் நியமனம்
ADDED : அக் 16, 2025 11:10 PM
கோவை: சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர் பணியிடத்துக்கு, ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மேட்டுப்பாளையம், அன்னுார், சூலுார், மதுக்கரை பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை ஆகிய வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு, சட்ட உதவி மற்றும் சட்ட அறிவை அனைத்து தரப்பு மக்களுக்கு எடுத்துரைக்க, சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள், 31 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆட்கள் தேர்வு நடை பெற உள்ளது. இப்பணியிடம் தற்காலிகமானது. தினசரி, 750 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும்.
இப்பணியிடத்திற்கு, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், எம்.எஸ்.டபுள்யூ படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், இதர கல்லுாரி மாணவர்கள், சட்டக்கல்லுாரி மாணவர்கள், மருத்துவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமூக சேவகர்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள், வரும் 25ம் தேதிக்குள், மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், கோவை-18 என்ற முகவரிக்கு, தபால் வழியாக மட்டும் விண்ணப்பிக்கலாம்.