தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தாசில்தார்கள் பணியிட மாற்றம்

தாசில்தார்கள் பணியிட மாற்றம்

தாசில்தார்கள் பணியிட மாற்றம்


ADDED : அக் 16, 2025 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2025 11:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை மாவட்டத்தில் எட்டு தாசில்தார்களும், 13 துணை தாசில்தார்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி தாசில்தார் வாசுதேவன், பொள்ளாச்சி சமூக பாதுகாப்பு திட்டத்துக்கும், கோவை விமான விரிவாக்கப்பணி தாசில்தார் ஜெயக்குமார் பொள்ளாச்சிக்கும், சூலுார் தாசில்தார் சரண்யா கோவை விமான நிலைய விரிவாகத்துக்கும், கோவை வடக்கு வழங்கல் தாசில்தார் செந்தில்குமார் சூலுாருக்கும், சூலுார் சமூக பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தார் ஆனைமலைக்கும், கிணத்துக்கடவு தாசில்தார் கணேஷ்பாபு கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை பணிக்கும்,பொள்ளாச்சி சமூக பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தார் குமரியானந்தன் கிணத்துக்கடவுக்கும், ஆனைமலை தாசில்தார் ராஜேந்திரன் சூலுார் சமூக பாதுகாப்பு திட்டத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

துணை தாசில்தார்கள் சூலுார் தலைமையிடத்து துணை தாசில்தார் சுமதி கோவை மாநகராட்சி தேர்தல் பிரிவுக்கும், அங்கு பணிபுரிந்த சத்தியஷீலா சூலுார் வழங்கல் அலுவலராகவும், கலெக்டர் அலுவலக 'இ' பிரிவு தலைமை உதவியாளராக இருந்த நாட்ராயன், சூலுார் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், அவருக்கு பதிலாக பொள்ளாச்சி தெற்கு மண்டல துணை தாசில்தார் சுந்தர்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சூலுர் வட்ட வழங்கல் அலுவலர் ஹேமாவதி, கலெக்டர் அலுவலக 'ஊ' பிரிவு தலைமை உதவியாளராகவும், அப்பணியில் இருந்த சையது இலியாஸ், மதுக்கரைதேர்தல் பிரிவு தாசில்தாராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கண்காணிப்பாளர் அம்பிகா, சூலுார் மண்டல துணை தாசில்தாராகவும், அவருக்கு பதிலாக சூலுார் மண்டல துணை தாசில்தார் கோமதி நியமிக்கப்பட்டுள்ளார்.

சூலுார் தாலுகா தனித்துணை தாசில்தார் முத்துமாணிக்கம், மதுக்கரை தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், பறக்கும்படை தனித்துணை தாசில்தார் நவநீதகிருஷ்ணன் கோவை தெற்கு தேர்தல் பிரிவு துணை தாசில்தாராகவும்,மாவட்ட வருவாய்த்துறையில் துணை தாசில்தாராக இருந்த அம்சவேணி, பறக்கும் படை தனித்துணை தாசில்தாராகவும், மாவட்ட வருவாய்த்துறையில் துணை தாசில்தாராக இருந்த செந்தில்குமார், கிணத்துக்கடவு வட்ட வழங்கல் அலுவலராகவும், கிணத்துக்கடவு வட்ட வழங்கல் அலுவலர் செல்லதுரை, பொள்ளாச்சி தெற்கு மண்டல துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு, கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us