/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ரெட் அலர்ட்'கட்டுப்பாட்டு அறை அமைப்பு
/
'ரெட் அலர்ட்'கட்டுப்பாட்டு அறை அமைப்பு
ADDED : டிச 03, 2024 06:36 AM

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிறப்பு தொலைபேசி எண்ணுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் கனமழை பெய்யும் பட்சத்தில், மழையினால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 04254- 222151 தொலைபேசியில் அழைத்து, எந்த பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மழை காலத்தின் போது, பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சிய பிறகு தான் உபயோகப்படுத்த வேண்டும். தேங்கியுள்ள நீர் அதாவது, மேற்கூரை, பிளாஸ்டிக் தொட்டிகள், பக்கெட்டுகள், பூந்தொட்டிகள், கேன்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேக்கம் இல்லாமல் அப்புறப்படுத்த வேண்டும்.
மழை பாதிப்புகள் இருந்தால், உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு அழைக்க வேண்டும், என்றனர்.