/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரி உயர்வை குறைக்க வேண்டும்! நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
/
வரி உயர்வை குறைக்க வேண்டும்! நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
வரி உயர்வை குறைக்க வேண்டும்! நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
வரி உயர்வை குறைக்க வேண்டும்! நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : அக் 28, 2024 12:34 AM
பொள்ளாச்சி ; 'பொள்ளாச்சி நகராட்சியில், ஆண்டுதோறும் சொத்துவரி, ஆறு சதவீதம் உயர்த்துவதற்கு பதிலாக, ஒரு சதவீதம் மட்டும் உயர்த்த வேண்டும்,' என நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், சாதாரண கூட்டம் தலைவர் தலைமையில் நடந்தது. கமிஷனர் கணேசன் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.
துணை தலைவர் கவுதமன்: நகராட்சி கமிஷனர், கடந்த முறை கூட்டத்தில், 'எனது செயல்பாடுகளை பாருங்கள்' என கூறியிருந்தார். அதுபோன்று, நியூஸ்கீம் ரோட்டில் வடிகால் துார்வாரி கழிவுநீர் முறையாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றியும், ஓடைகள் துார்வாரி நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.
அம்மா திருமண மண்டபம் நகராட்சி வசம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் பாராட்டுக்குரியது. இதுபோன்று, நகரின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கவுன்சிலர்கள்: நகராட்சியில், ஏற்கனவே சொத்து வரி உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும், ஆறு சதவீதம் வரி உயர்வு என்பது மக்களுக்கு வரிச்சுமையை ஏற்படுத்தும். ஆறு சதவீதத்துக்கு பதிலாக ஒரு சதவீதம் உயர்த்த வேண்டும். இது குறித்து அரசுக்கு தெரிவித்து வரியை குறைக்க வேண்டும்.
நகராட்சியில், ரோடுகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. ராஜாமில்ரோடு, கந்தசாமி பூங்கா ரோடுகள் மோசமாக உள்ளன. அவற்றை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலக்காடு ரோடு மேம்பாலத்தில் தெருவிளக்கு பராமரிக்க வேண்டும்.
நகராட்சி நிர்வாகம்: ரோடுகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சேதமான ரோடுகளில், 'பேட்ச் ஒர்க்' செய்யப்பட்டுள்ளன. மற்ற ரோடுகளும் பராமரிக்கப்படும்.
வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட பொறுப்பு அமைச்சர், நகராட்சி அமைச்சரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க முயற்சிகள் எடுக்கப்படும். இவ்வாறு, விவாதம் நடந்தது. கூட்டத்தில் மொத்தம், 104 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.