/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்பதிவு மையத்தின் பணி நேரம் குறைப்பு
/
முன்பதிவு மையத்தின் பணி நேரம் குறைப்பு
ADDED : ஜன 14, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; பொங்கல் பண்டிகையான இன்று, பயணிகள் முன்பதிவு மையங்கள் எட்டு மணி நேரம் மட்டுமே இயங்கும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சேலம் கோட்ட ரயில்வே துறையில் முன்பதிவு மையங்கள், இன்று ஒரு ஷிப்ட் மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 8:00 முதல், மதியம் 2:00 மணி வரை மட்டும், முன்பதிவு மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

