/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீவனத்துக்கு மானியம் குறைப்பு; பால் உற்பத்தியாளர்கள் பரிதவிப்பு
/
தீவனத்துக்கு மானியம் குறைப்பு; பால் உற்பத்தியாளர்கள் பரிதவிப்பு
தீவனத்துக்கு மானியம் குறைப்பு; பால் உற்பத்தியாளர்கள் பரிதவிப்பு
தீவனத்துக்கு மானியம் குறைப்பு; பால் உற்பத்தியாளர்கள் பரிதவிப்பு
ADDED : ஜன 21, 2025 11:33 PM
அன்னுார்; 'கலப்பு தீவன மானியம் குறைக்கப்பட்டதால் நஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளோம்' என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், ஆவின் நிறுவனத்திற்கு, தினமும், சராசரியாக 35 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாளர்களால் வழங்கப்படுகிறது.
இது கொழுப்பு மற்றும் இதர சத்துக்களின் அடிப்படையில் ஒரு லிட்டருக்கு சராசரியாக பசும்பாலுக்கு 33 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்துடன் ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் அரசு இதுவரை வழங்கி வந்த மாட்டுத்தீவன மானியம் குறைக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னூர் வட்டார பால் உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது: ஆவின் நிறுவனம் கடந்த ஆண்டு வரை கலப்பு தீவனம் 50 கிலோ மூட்டைக்கு 300 ரூபாய் மானியம் வழங்கி வந்தது. அந்த மானியம் தற்போது 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கலப்பு தீவனம் மூட்டை விலை 1050 லிருந்து 1250 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மானியமும் குறைக்கப்பட்டுள்ளதால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம். இத்துடன் மாடுகளுக்கு தரும் மசால் புல், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலையும் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. தினமும் சராசரியாக ஏழு லிட்டர் பால் கறக்கும் மாட்டுக்கு ஆகும் தீவன செலவு மற்றும் தொழிலாளி கூலியை கணக்கிட்டால் ஒரு ரூபாய் கூட மிஞ்சுவதில்லை.
மேலும் இதுவரை ஆவின் நிறுவனமே மாடுகளுக்கு 500 அல்லது 600 ரூபாய் செலவில் காப்பீடு செய்து வந்தது. காப்பீடு செய்யப்பட்ட மாடுகள் இறக்கும் பட்சத்தில் 50 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு பெற்று வந்தோம்.
இந்நிலையில் கடந்த ஓராண்டாக மாடுகளுக்கு காப்பீடு செய்யப்படுவதில்லை. இதனால் வெளியே தனியார் நிறுவனங்களில் காப்பீடு செய்யும்போது 1500 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.
விவசாயத்தில் தொழிலாளர் பற்றாக்குறை, விளை பொருட்களுக்கு நிலையான கட்டு படியாகும் விலை இல்லை. நிலத்தடி நீர்மட்டம் குறைவு ஆகிய காரணங்களால் உப தொழிலாக கறவை மாடு வளர்த்து வருகிறோம்.
இதில் ஒவ்வொரு மாதமும் நிரந்தரமாக குறிப்பிட்ட தொகை கிடைக்கிறது. அதுவும் தற்போது அரசின் நடவடிக்கையால் நஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளது. அரசு உடனடியாக பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
கலப்பு தீவனத்துக்கு ஒரு மூட்டைக்கு குறைந்தது 300 ரூபாய் மானியம் வழங்க வேண்டும். மாடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் காப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

