/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பவானி ஆற்றில் ரீல்ஸ் மோகம்; போலீசார் கடும் எச்சரிக்கை
/
பவானி ஆற்றில் ரீல்ஸ் மோகம்; போலீசார் கடும் எச்சரிக்கை
பவானி ஆற்றில் ரீல்ஸ் மோகம்; போலீசார் கடும் எச்சரிக்கை
பவானி ஆற்றில் ரீல்ஸ் மோகம்; போலீசார் கடும் எச்சரிக்கை
ADDED : ஆக 20, 2025 09:40 PM
மேட்டுப்பாளையம்; ரீல்ஸ் மோகம் காரணமாக, அண்மையில் இளைஞர் ஒருவர் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் மேம்பாலம் தடுப்பு சுவர் மீது ஏறி நின்று ரீல்ஸ் எடுத்து கொண்டிருந்தார். இதை அறிந்த போலீசார் அங்கு சென்று இளைஞரை பிடிக்க முயன்ற போது, அவர் மேம்பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து, மறுபுறம் நீந்தி சென்று போலீசாரிடம் இருந்து தப்பி சென்றார்.
நீர்நிலைகளில் அத்துமீறியும், அனுமதியில்லாத இடங்களுக்கு சென்றும் ரீல்ஸ் எடுத்து வெளியீடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இவ்வாறு ரீல்ஸ் எடுத்து வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் கூறுகையில், 'பவானி ஆற்றில் ஆபத்தான பகுதிகள் அதிகம் உள்ளன. யாராவது அத்துமீறி பவானி ஆற்றில் ரீல்ஸ் எடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். லைப் காட்ஸ் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்,' என்றனர்.--