/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்ணை காக்கும் சீர்திருத்தம்,: ஈஷா நிறுவனர் சத்குரு கருத்து
/
மண்ணை காக்கும் சீர்திருத்தம்,: ஈஷா நிறுவனர் சத்குரு கருத்து
மண்ணை காக்கும் சீர்திருத்தம்,: ஈஷா நிறுவனர் சத்குரு கருத்து
மண்ணை காக்கும் சீர்திருத்தம்,: ஈஷா நிறுவனர் சத்குரு கருத்து
ADDED : ஜூலை 03, 2025 12:32 AM
கோவை:
'மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் காடுகள் விதிகள், நம் மண்ணை காக்கும் பெரும் சீர்திருத்தம்' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் சார்பில், விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், மாதிரி விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், காடுகளுக்கு வெளியே மரங்களின் பரப்பை அதிகரித்தல் உள்ளிட்ட மாதிரி விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள பதிவு:
நமது விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்கவும், பசுமை பரப்பை அதிகரிக்கவும், பாரதத்தின் மண்ணைக் காக்கவும், நமக்குத் தேவைப்படும் பெரும் சீர்திருத்தம் இது. புதிய வேளாண் காடு வளர்ப்பு விதிகளானது, விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் மரங்களை வளர்ப்பதன் வாயிலாக, பொருளாதார லாபம் ஈட்டுவதை ஊக்குவிக்கும்.
இது, உலகெங்கிலும் சட்டப்பூர்வமான சந்தைகளை உறுதி செய்து, மரம் வளர்ப்பை நோக்கி விவசாயிகளை மேலும் ஊக்கப்படுத்தும். இந்த மைல்கல் போன்ற முற்போக்கான சீர்திருத்தத்தை முன்னெடுத்த, சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு வாழ்த்துக்கள்.
பொருளாதாரமும், சூழலியலும் ஒன்றுக்கொன்று துணை நின்று, மண், நீர், நமது விவசாயிகள் மற்றும் தேசத்துக்கு அனைத்து வகையிலும் பலன்களை அளிக்கும் என்பதை, இச்சீர்திருத்தம் உலகுக்கு நிரூபிக்கும்.
இவ்வாறு, சத்குரு கூறியுள்ளார்.