/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண் உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்
/
பெண் உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்
ADDED : பிப் 05, 2024 12:36 AM
பெ.நா.பாளையம்;துடியலுார் அருகேயுள்ள குருடம்பாளையம் ஊராட்சி அருணா நகரில், ஊராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது.
தமிழகம் முழுவதும், மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், ஊராட்சிகளில் உள்ள பெண் உறுப்பினர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடந்து வருகிறது. பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிளிச்சி, நாயக்கன்பாளையம், அசோகபுரம், குருடம்பாளையம், சின்னதடாகம் உள்ளிட்ட ஐந்து ஊராட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர்களுக்கான, இரண்டு நாள் பயிற்சி முகாம் குருடம்பாளையம் ஊராட்சி அருணா நகரில் உள்ள சமுதாய கூடத்தில் நடந்தது.
பயிற்றுநர்கள் யசோதா மற்றும் வீரமுத்து ஆகியோர், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் திறம்பட பணியாற்றுவது, பொதுமக்களை அணுகும் முறை, அரசு நலத்திட்டங்களை பயனாளிகளிடம் கொண்டு சேர்ப்பது குறித்தும் பயிற்சி அளித்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் துணை பி.டி.ஓ., ராஜேஸ்வரி உட்பட அசோகபுரம், குருடம்பாளையம் ஊராட்சிகளை சேர்ந்த பெண் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

