/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செஸ் நடுவர்களுக்கு புத்தாக்க பயிற்சி
/
செஸ் நடுவர்களுக்கு புத்தாக்க பயிற்சி
ADDED : மார் 18, 2025 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை மாவட்ட செஸ் சங்கம் சார்பில் நடந்த, நடுவர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாமில், 41 இளம் நடுவர்கள் பயன்பெற்றனர்.
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், செஸ் நடுவர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது. 41 இளம் செஸ் நடுவர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்ட செஸ் சங்கம் சார்பில் நடந்த முகாமில், செஸ் போட்டியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள், மாற்றங்கள் குறித்து தமிழ்நாடு மாநில செஸ் சங்க துணை தலைவர் விஜயராகவன், கோவை மாவட்ட சங்க இணை செயலாளர் சதீஸ் ஆகியோர், செஸ் போட்டிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.