/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வட்டார கலை திருவிழா: வாகை அரசு பள்ளி அசத்தல்
/
வட்டார கலை திருவிழா: வாகை அரசு பள்ளி அசத்தல்
ADDED : அக் 16, 2025 09:02 PM
கருமத்தம்பட்டி: சூலூர் வட்டார கலைத்திருவிழா போட்டியில், 14 பரிசுகளை வென்று வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் அசத்தி உள்ளனர்.
சூலூர் வட்டார அளவிலான கலைத்திருவிழா ஆர்.வி.எஸ்., கல்லூரியில் நடந்தது. இதில், வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், இலக்கிய நாடகம், நடிப்பு, பொம்மலாட்டம், தனி நபர் நாட்டுப்புற நடனம், குழு நாட்டுப்புற நடனம், களிமண் சிற்பம், மணல் சிற்பம், ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகளில் முதலிடம் பெற்று அசத்தினர்.
மேலும், ரங்கோலி, பரதம், கேலி சித்திரம், பானை ஓவியம் ஆகிய போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்றனர். பிற வகை நடனத்தில் மூன்றாம் இடம் பெற்றனர். மொத்தம், 14 பரிசுகளை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியரை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வாழ்த்தினர்.