/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்டல தடகளம்; சி.ஐ.டி., கல்லுாரியில் துவக்கம்
/
மண்டல தடகளம்; சி.ஐ.டி., கல்லுாரியில் துவக்கம்
ADDED : பிப் 22, 2024 05:52 AM

கோவை: பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கான, மண்டல அளவிலான தடகளப்போட்டி, அவிநாசி ரோடு சி.ஐ.டி., சாண்ட்விச் பாலிடெக்னிக் கல்லுாரியில், நேற்று துவங்கியது.
இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன் (ஐ.பி.ஏ.ஏ.,) சார்பில், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான மண்டல மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான தடகளப்போட்டிகள், சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்தது. இன்றும் நடக்கிறது.
போட்டியை, சி.ஐ.டி., சாண்ட்விச் பாலிடெக்னிக் கல்லுாரியின் முதல்வர் ரேணுகா துவக்கி வைத்தார். சி.ஐ.டி., உடற்கல்வித்துறை இயக்குனர் சம்பத், உதவி இயக்குனர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
கோவை மண்டலத்துக்கு உட்பட்ட, 26 கல்லுாரிகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
100மீ., 200மீ., 400மீ., 800மீ., 1500மீ., 4*100மீ., தொடர்ஓட்டம், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.
நேற்று நடந்த போட்டி முடிவுகள்:
மாணவர்கள் பிரிவு 5000மீ., ஓட்டத்தில் சென்ராயன் (நஞ்சை லிங்கம்மாள்) முதலிடம், சாருஹாசன் இரண்டாமிடம் (ராமகிருஷ்ணா), மதன் மூன்றாமிடம் (பி.எஸ்.ஜி.,); குண்டு எறிதலில் வினேஷ் (இந்துஸ்தான்) முதலிடம், சஞ்சய் (நாச்சிமுத்து) இரண்டாமிடம், மயில்சாமி (அரசு கல்லுாரி) மூன்றாமிடம்; 100மீ., ஓட்டத்தில் சஞ்சய் (சங்கரா) முதலிடம், பாலகண்ணன் (பி.எஸ்.ஜி.,) இரண்டாமிடம், ஸ்ரீராம் (நாச்சிமுத்து) மூன்றாமிடம்; உயரம் தாண்டுதலில், அபின் (நாராயணகுரு) முதலிடம், பிரணேஷ் (பி.எஸ்.ஜி.,) இரண்டாமிடம், விஷ்வா (நஞ்சை லிங்கம்மாள்) மூன்றாமிடம் பிடித்தனர்.
மாணவியர் பிரிவு 100மீ., ஓட்டத்தில், சந்தியா (அரசு கல்லுாரி) முதலிடம், ஹரிஸ்மிதா (பி.எஸ்.ஜி.,) இரண்டாமிடம், வர்ஷா வள்ளியம்மை (பி.எஸ்.ஜி.,) மூன்றாமிடம்; உயரம் தாண்டுதலில் சுவாதிகா (நாச்சிமுத்து) முதலிடம், அனிதா (பி.எஸ்.ஜி.,) இரண்டாமிடம், பிருந்தா திவ்யதர்சினி (பி.எஸ்.ஜி.,) மூன்றாமிடம் பிடித்தனர்.