/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு
/
வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு
ADDED : மே 19, 2025 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுார் வட்டார வளர்ச்சி அலுவலராக, மகேஸ்வரி பொறுப்பேற்றார்.
அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) ரவீந்திரன் பணியாற்றி வந்தார். அவர் கடந்த வாரம் காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு பணிபுரிந்து வந்த மகேஸ்வரி, மாற்றப்பட்டு நேற்று அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பொறுப்பேற்றார். அவருக்கு ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.