/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்
/
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்
ADDED : நவ 02, 2025 10:09 PM
கோவில்பாளையம்: கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் வெளியிட்டுள்ள உத்தரவு :
சர்க்கார் சாமக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) ராஜேஷ்குமார், கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா, சர்க்கார் சாமக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வட்டார ஊராட்சி), காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) சீனிவாசன், கோவை மாவட்ட ஊராட்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், பொள்ளாச்சி வடக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) சுபா, காரமடை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வட்டார ஊராட்சி), கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) விஜயகுமார், பொள்ளாச்சி வடக்கு வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வட்டார வேளாண் ஊராட்சி) நியமிக்கப்பட்டுள்ளார்,
பணி மாறுதலை தவிர்க்க விடுப்பில் சென்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

