தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பதிவு தபால் சேவை நடைமுறையில் இருக்கு

பதிவு தபால் சேவை நடைமுறையில் இருக்கு

பதிவு தபால் சேவை நடைமுறையில் இருக்கு


ADDED : ஆக 29, 2025 12:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2025 12:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தற்போது நடைமுறையில் இருக்கும் பதிவு தபால் சேவை, அக்., 1 முதல் விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்படுகிறது. பல இடங்களில் தற்போதே பதிவு தபால் முன்பதிவு செய்ய மறுப்பதால், போதிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என, தபால் துறைக்கு வலியுறுத்தப்பட்டது.

தபால் செயல்பாட்டு பிரிவு சார்பில், உதவி இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

சில பகுதிகளில் உள்ள தபால் துறை கவுன்டர்களில், பதிவு தபால் முன்பதிவு செய்ய மறுப்பதாக, தபால் இயக்குனரக கவனத்துக்கு வந்தது. இது மிகவும் ஆட்சேபனைக்குரியது. பதிவு தபால் முன்பதிவு, இதுவரை செயல்பாட்டில் உள்ளது; தற்போது வரை நிறுத்தப்படவில்லை என்பது மீண்டும் தெரிவிக்கப்படுகிறது.

பதிவு தபால் சேவை, விரைவு தபால் சேவையுடன், அக்.1 முதல் இணைக்கப்படுகிறது.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us