/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பதிவு தபால் சேவை செப்.1 முதல் நிறுத்தம்; அதிகாரிகள் தகவல்
/
பதிவு தபால் சேவை செப்.1 முதல் நிறுத்தம்; அதிகாரிகள் தகவல்
பதிவு தபால் சேவை செப்.1 முதல் நிறுத்தம்; அதிகாரிகள் தகவல்
பதிவு தபால் சேவை செப்.1 முதல் நிறுத்தம்; அதிகாரிகள் தகவல்
ADDED : ஆக 14, 2025 08:19 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள, 2 தலைமை தபால் அலுவலகங்கள், 42 துணை அலுவலகங்கள், 164 கிளை அலுவலகங்களில் செப். 1ம் தேதி முதல் பதிவு தபால் சேவை இருக்காது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் அலுவலகங்களில் போஸ்ட் கார்டு, இன்லேண்ட் லெட்டர் பயன்பாடு மறைந்து விட்டது. இதனால், முக்கிய சாலைகளின் அடையாளமாக திகழ்ந்த சிவப்பு நிற பெட்டிகள் காட்சிப் பொருளாகவே உள்ளது. இந்நிலையில், 128 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த பதிவுத் தபால் சேவை, செப். 1ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, இந்திய தபால் துறை வெளியிட்டது. அதன்படி, பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள 2 தலைமை தபால் அலுவலகங்கள், 42 துணை அலுவலகங்கள், 164 கிளை அலுவலகங்களில் இந்த சேவை இருக்காது என, தபால் துறையினர் தெரிவித்துள்னளர்.
தபால் அலுவலர்கள் கூறியதாவது:
பதிவுத்தபாலுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாத காரணத்தால், செப். 1ம் தேதியுடன் விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்படுகிறது. இதுவரை, பதிவுத் தபால்கள் வாயிலாக அரசு கடிதம், அரசாணை, நீதிமன்ற ஆணை, வங்கி கடிதம், பாஸ்போர்ட் ஆகியவை அனுப்பப்பட்டு வந்தன. அதற்கு கட்டணமாக 26 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
பதிவுத் தபாலை எங்கு வேண்டுமானாலும் இதே கட்டணத்தில் அனுப்ப முடியும். தபாலின் எடை கூடினால் மட்டுமே கட்டணம் மாறும். அதேநேரம், பதிவுத் தபாலை, அதில் குறிப்பிட்டுள்ள நபர் மட்டுமே கையெழுத்திட்டு பெற முடியும்.
ஆனால், விரைவுத் தபால் அனுப்ப, 41 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தொலைவு, தபாலின் எடைக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும். விரைவுத் தபாலை, அதில் குறிப்பிட்ட நபர் அல்லாமல், மற்றவர்களும் கையெழுத்திட்டு பெறலாம்.
அதன்படி, பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் இந்த சேவை நிறுத்தப்படுவதால் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.