/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மகிழ் முற்றம்' துவக்கம் 'எமிஸ்' தளத்தில் பதிவு
/
'மகிழ் முற்றம்' துவக்கம் 'எமிஸ்' தளத்தில் பதிவு
ADDED : ஜூலை 25, 2025 08:58 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 'மகிழ் முற்றம்' துவக்கி, 'எமிஸ்' தளத்தில் மாணவர் குழு அமைப்பு செயல்பாடுகள் உள்ளீடு செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களை ஒருங்கிணைத்து, ஆக்கப்பூர்வமான அறிவை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளி மாணவர்களை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என, 5 குழுக்களாக பிரிந்து, ஒவ்வொரு அணிக்கும் மாணவர் தலைவர் மற்றும் மாணவி தலைவி என, 10 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த குழுக்களின் செயல்பாடுகள், 'எமிஸ்' தளத்தில் உள்ளீடு செய்யப்படுகிறது.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
மாணவர்கள் மத்தியில் தலைமை பண்பை வளர்க்கவும், குழுவாக இணைந்து செயல்படுவதை ஊக்குவிக்கவும், வேற்றுமையில் ஒற்றுமை மனப்பான்மை மற்றும் முழுமை வாய்ந்த வளர்ச்சியை ஆதரிக்கும் நோக்கில், 'மகிழ் முற்றம்' என்ற பெயரில் மாணவர் அமைப்பு துவக்கப்படுகிறது.
இக்குழுக்களின் செயல்பாடு 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். குறிப்பாக, ஆண்டுவிழாவின் போது, புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெறும் குழுவின் விபரம் அறிவிக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.