/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவு வாகன விழிப்புணர்வு பிரசாரம்
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவு வாகன விழிப்புணர்வு பிரசாரம்
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவு வாகன விழிப்புணர்வு பிரசாரம்
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவு வாகன விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : ஜன 30, 2024 11:52 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டுப்பதிவு செய்யும் முறை குறித்து, பொதுமக்களிடம் விளக்கும் வகையில், வாகன விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
லோக்சபா தேர்தல், நடப்பாண்டில் சில மாதங்களில் அறிவிப்பு வெளியாகி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில், தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, பொதுமக்களிடம், ஓட்டு அளிப்பதன் அவசியம் குறித்து விளக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பொதுமக்களிடம், எவ்வாறு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டு அளிப்பது என விளக்கும் வகையில், வாகனம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மக்கள் தொடர்பு முகாம் முன் வைக்கப்பட்டு இருந்த விழிப்புணர்வு வாகனத்தை, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா, தாசில்தார் ஜெயசித்ரா ஆகியோர் பார்வையிட்டனர்.
தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சரவணக்குமார், மண்டல துணை தாசில்தார் பட்டுராஜா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, பொதுமக்கள் ஓட்டு போடுவது குறித்து கேட்டறிந்தனர்.
வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தேர்தலின் போது, அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்; 100 சதவீதம் ஓட்டுப்பதிவாக வேண்டும் என, தற்போது விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்படுகிறது.
இது பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, வாகனத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கொண்டு சென்று மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், இந்த வாகனங்கள் வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.