/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அகதிகள் முகாமில் பிறப்பவர்களுக்கு குடியுரிமை கோரிய மனு நிராகரிப்பு
/
அகதிகள் முகாமில் பிறப்பவர்களுக்கு குடியுரிமை கோரிய மனு நிராகரிப்பு
அகதிகள் முகாமில் பிறப்பவர்களுக்கு குடியுரிமை கோரிய மனு நிராகரிப்பு
அகதிகள் முகாமில் பிறப்பவர்களுக்கு குடியுரிமை கோரிய மனு நிராகரிப்பு
ADDED : மார் 15, 2024 03:09 AM

சென்னை: தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் பிறக்கும் குழந்தைகளுக்கு, இந்திய குடியுரிமை வழங்க கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ரவிகுமார் என்பவர் தாக்கல் செய்த மனு:
இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் பிறக்கும் குழந்தைகளுக்கு, இந்திய குடியுரிமை வழங்க பரிசீலிக்கும்படி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். அதற்கு, மத்திய உள்துறை அமைச்சகம் எனக்கு அனுப்பிய பதிலில், 'அகதிகள் முகாம்களில் பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும், குடியுரிமை கேட்டு உரிமை கோர முடியாது.
பிறப்பு அடிப்படையில் கோருவது என்றால், குடியுரிமை சட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பிரிவின்படியே முடியும்' என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் பிறப்பிக்கும் குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும்படி, பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், மனுவில் போதிய விபரங்கள் இல்லை என்றும் முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. குடியுரிமை வழங்குவதற்கு தேவையான விபரங்களை அதிகாரிகளுக்கு அளிக்காமல், பொதுவாக உத்தரவு பிறப்பிக்க, முதல் பெஞ்ச் மறுத்து விட்டது.

