தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தலைமுறை தாண்டி சீறி பாய்கிறது ரேக்ளா

தலைமுறை தாண்டி சீறி பாய்கிறது ரேக்ளா

தலைமுறை தாண்டி சீறி பாய்கிறது ரேக்ளா


UPDATED : நவ 16, 2026 05:57 PM

ADDED : நவ 16, 2026 05:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 05:57 PM ADDED : நவ 16, 2026 05:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ஒரு காலத்தில் பொங்கல் கிராமத் திருவிழாக்களில் இருந்த ரேக்ளா பந்தயம், இப்போது ஜென் சி தலைமுறையையும் ஈர்த்துள்ளது.

ரேக்ளா பந்தயம் வெறும் வேகத்தை நிர்ணயிக்கும் போட்டி மட்டுமல்ல, கால்நடை வளர்ப்பு, பாரம்பரிய மாட்டினங்களைப் பாதுகாத்தல், மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவையும் வளர்க்கிறது.

கொங்கு மண்டலத்தில் காங்கேயம் காளைகளையே ரேக்ளா பந்தயத்தில் பயன்படுத்துகின்றனர். இந்த வகை காளை வளர்ப்பு மற்றும் பந்தயங்கள் மாடுகளின் திறனையும், அவற்றின் தனித்துவத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் என்று, ரேக்ளா பந்தயத்தில் தன் இளம் வயதில் பங்கேற்ற செந்தில் கூறுகிறார்.

முன்பெல்லாம் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் பங்கேற்ற இந்தப் போட்டிகளில், தற்போது ஐ.டி. உட்பட பல துறைகளில் பணியாற்றும் இளைஞர்களும் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.

சமூக வலைதளங்களில் ரேக்ளா போட்டிக் காட்சிகளை பகிர்வது, போட்டிகளுக்கு சென்று பார்ப்பது, மாடுகளை வளர்ப்பது, பயிற்சி அளிப்பது என ஒவ்வொன்றிலும் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்களிக்கின்றனர்.

தங்களின் மண்ணின் அடையாளத்தை, தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமும் இதற்கு காரணம்.

இது போன்ற பாரம்பரிய விளையாட்டை, சரியான முறையில் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதே இதன் உண்மையான வெற்றியாக இருக்கும் என, ரேக்ளா போட்டியாளர் பாலாஜி கூறுகிறார்.

ரேக்ளா பந்தயங்களிலும்


வந்து விட்டன மாற்றங்கள்
முன்பு நீண்ட தூரங்களில் நடத்தப்பட்ட ரேக்ளா போட்டிகள் தற்போது 200, 300, 400 மீட்டர் எனப் பிரிக்கப்பட்டு, மாடுகளின் வயதுக்கு ஏற்ப நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஜோடி மாடுகளாகப் போட்டியில் பங்கேற்கச் செய்வது, நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடும் கருவிகளை பயன்படுத்துவது, பார்வையாளர்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது... என போட்டிகள் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றன.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us