sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பஞ்சு வரத்து கூடுதலாக இருந்ததால் திருத்தப்பட்ட இருப்பு நிலை வெளியீடு

/

பஞ்சு வரத்து கூடுதலாக இருந்ததால் திருத்தப்பட்ட இருப்பு நிலை வெளியீடு

பஞ்சு வரத்து கூடுதலாக இருந்ததால் திருத்தப்பட்ட இருப்பு நிலை வெளியீடு

பஞ்சு வரத்து கூடுதலாக இருந்ததால் திருத்தப்பட்ட இருப்பு நிலை வெளியீடு


ADDED : மார் 16, 2024 02:06 AM

Google News

ADDED : மார் 16, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:எதிர்பார்த்தை காட்டிலும் பருத்தி வரத்து உயர்ந்துள்ளதால், மத்திய ஜவுளித்துறை கமிஷனரகம், திருத்தப்பட்ட இருப்பு நிலை குறிப்பை வெளியிட்டுள்ளது.

நடப்பு பருத்தி சீசன், 2023 அக்., மாதம் துவங்கிய போது, உத்தேச அடிப்படையில், பருத்தி பஞ்சுக்கான இருப்புநிலை குறிப்பை, மத்தியஜவுளித்துறை கமிஷனரகம் வெளியிட்டது. கடந்த ஆறு மாதங்களில், எதிர்பார்த்த அளவை காட்டிலும் கூடுதலான பஞ்சு விற்பனைக்கு வந்துள்ளது. அதற்கேற்ப, பஞ்சு இருப்பு நிலை குறைப்பு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள ஜவுளித்துறை கமிஷனர் ரூப் ராஷி, இந்திய பருத்தி கழகம், இந்திய பருத்தி சங்கம், நுாற்பாலைகள் மற்றும் பருத்தி வியாபார அமைப்புகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று முன்தினம் கலந்தாய்வு நடத்தினார்.

அதனை தொடர்ந்து, நடப்பு பருத்தி ஆண்டில், வரத்து கூடுதலாக இருப்பதால், திருத்தியமைக்கப்பட்ட இருப்பு நிலை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில், 15 லட்சம் பேல்களாக (ஒரு பேல் என்பது, 170 கிலோ) இருந்த பஞ்சு ஏற்றுமதி உச்சவரம்பு, 27 லட்சம் 'பேல்'களாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:

கடந்த அக்., மாதம் வெளியான இருப்பு நிலை குறிப்பில், பருத்தி பஞ்சு மகசூல், 316 லட்சம் பேல் என்பது, 323லட்சம் பேல்களாக உயர்ந்துள்ளது. இறக்குமதி, 12 லட்சம் பேல் உட்பட, மொத்த பருத்தி பஞ்சு வரத்து, 392லட்சம் பேல் என்பது, 396லட்சம் பேல்களாக உயர்ந்துள்ளது.

நுாற்பாலைகளுக்கான தேவையான பஞ்சு, 294 லட்சம் பேல் என்பது, 301 லட்சம் பேல்களாக உயர்ந்துள்ளது. பஞ்சு ஏற்றுமதி உச்சவரம்பு, 25 லட்சம் பேல் என்பது, 27 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பஞ்சுக்கான தேவை, 344 லட்சம் பேல்களாக உயர்ந்துள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us