ADDED : ஜூன் 21, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கே.வி.ஐ.சி.,) கோவை மாவட்ட உதவி இயக்குநர் சித்தார்தன் கூறியதாவது:
கே.வி.ஐ.சி., சார்பில், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், நாடு முழுதும் 11,480 பயனாளிகளுக்கு, ரூ.300 கோடி கடன் மானியம் விடுவிக்கப்பட்டது. டில்லியில் நடந்த நிகழ்வில் ஆணைய தலைவர் மனோஜ் குமார் மானியத்தை விடுவித்தார்.
இதில், தமிழகத்தில் 1,539 திட்டங்களுக்கு ரூ.32.10 கோடி மானியம் விடுவிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில், 102 பயனாளிகளுக்கு ரூ.4.07 கோடி மானியம் வழங்கப்பட்டது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.